விஜயையும், என்னையும் பா.ஜ.க. பெரும் போது அருகில் இருந்து பிரசவம் பார்த்தது திருமாவளவன் தான் - சீமான்
சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.) நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பொதுக்குழு கூட
சீமான்


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை

ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து சீமான் அளித்த பேட்டியில் கூறியது :

ஆசிரியர்கள் இந்த போராட்டம் எல்லாம் இன்று, நேற்று தொடங்கவில்லை கால் நூற்றாண்டுகளுக்கு

மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் அவசரமாக பணிக்கு எடுத்தவர்கள் தான் செவிலியர்கள் கொரோனா

காலத்தில் மருத்துவர்கள் கடவுள் போலவும் செவிலியர்கள் தேவதைகள் போலவும்

தெரிந்தனர் இப்போது தேவையில்லாதவர்களாக தெரிகிறார்கள்.

பகுதி நேர ஆசிரியர்கள், தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கின்ற ஆசிரியர்கள் நாடே போராட்டக் களமாக இருக்கும்போது நல்லாட்சி என்பது சொல்லாட்சியாக மாறிவிட்டது. வெற்று வார்த்தையாகிவிட்டது விடுபட்டவர்களுக்கு மடிக்கணினி, மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறோம் என வேலைகளை செய்து மக்களை ஏமாற்றி வாக்கை பறிப்பதில் தான் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடினால் நாடு எதை நோக்கி நகர்கிறது என்று

பாருங்கள் டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால் அரசு கண்டு கொள்ளாமல் இருக்குமா என்று நீங்கள் பாருங்கள்.

ஆட்சி முறை எதை நோக்கி நகர்கிறது குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு பத்து லட்சம் பணம் கொடுக்கிறது. நீங்கள் கட்டிய பள்ளி சுவர் விழுந்து மாணவன் இறந்து போனால், ராணுவ வீரர்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் எதை நோக்கி இந்த ஆட்சி முறை நகர்கிறது.

இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் எதிர்த்து பேசுவதும், ஆசிரியர்கள் போராட்டம் திமுக ஆட்சியில் மட்டும் எழவில்லை.

தேர்தல் அரசியலை நோக்கி குறி வைப்பதால் மக்கள் அரசியல் கட்சி கவலைப்படுவதில்லை.

சகிக்க முடியாத திரைக் கவர்ச்சி, கண், காதுகளுக்கு போதை ஏற்றி மூழ்கடித்து

விட்டது.

திமுக ஆட்சிக்கு வருவது மாணவர்கள் புரட்சியில் தான் அந்த கிளர்ச்சியை வைத்து ஆட்சியில் வந்தது ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர் அமைப்பு இருந்தால் ஆட்சியை

எதிர்த்து போராடினால் கட்டுப்படுத்த முடியாது என மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது

கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது ஆனால் சினிமா பேசலாம். இறை வழிபாட்டை விமர்சித்த இந்த கட்சி தான் திரை வழிபாட்டை போற்றுகிறது.

நல்லகண்ணு யாருன்னு தெரியவில்லை நடிகர் நாடாள தயாராக இருக்கிறார்.

மக்கள் தாங்கள் புரட்சி செய்வார்கள் என லெனின் கூறினார். அதற்குச் சான்று

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் பற்றி எரிந்தது எல்லா வீட்டிலும் தீ பற்றி

எரிந்தது என் வீடு எரியாது என உறுதி தர முடியாது ஏறியும் அந்த தீ தான் புரட்சி

தீ . இது எங்களது தீ அல்ல எங்கள் முன்னோர் ஏற்றி வைத்த தீ. உங்கள் குறை கேட்க வந்த பிள்ளைகள் நாங்கள் அல்ல குறை தீர்க்க வந்த பிள்ளைகள்

நாங்க நினைக்க பிறந்தவர்கள் அல்ல நிரூபிக்க பிறந்தவர்கள்.

இதுதான் பிரச்சனை இதற்கு தீர்வு இதுதான் என வீடியோ போட்டு காட்டுவேன்.

ஈ.வெ.ராமசாமி தான் பெரியார் அந்த பக்கம் நில்லு என் இனத்தின் ஒவ்வொருவரும் பெரியார் இந்த பக்கம் வந்து நில்லு பெரியாரும் போராடினார்.

அதை ஏற்கிறோம் எதிர்க்கவில்லை, பெரியார் தான் செய்தார் அதை ஏற்கவில்லை எதிர்க்கிறோம்.

போன ஆண்டு கொடுத்த தேர்தல் அறிக்கையில் எது மாறும் பிரச்சனை என்ன என்று தெரியாமல் ஏன் அதிகாரத்தில் இருக்கிறாய் தேர்தல் அறிக்கை என்பது ஒரு சடங்கு.

234 தான் இலக்கு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது எங்கள் இலக்கு தலை சிறந்த

நாடாக மாற்றுவது.

எப்படிப் பார்த்தாலும் இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல வீழ்ச்சி.

விஜயும், என்னையும் பா.ஜ.க. பெரும் போது அருகில் இருந்து பிரசவம் பார்த்துவிட்டது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான் என பேசினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam