Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 27 டிசம்பர் (ஹி.ச.)
ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649/22650) ரயில் தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு ஈரோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னையை காலை 3.40 மணிக்கு சென்றடையும்.
இந்த நிலையில், இந்த ரயில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி இந்த ரயிலானது 1-ந்தேதி முதல் ஈரோட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, காலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மக்கள் பல நாட்களாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN