Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச)
வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் நாட்களான
27.12.2025 சனிக்கிழமை
28.12.2025 ஞாயிற்றுக் கிழமை
03.01.2026 சனிக்கிழமை
04.01.2026 ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்கள் நடைபெற உள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான். அதை எவரும், எந்த காரணத்திற்காகவும் இழந்து விடக் கூடாது.
எனவே, அவரவர் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, விடுபட்ட அனைத்து வாக்காளர்களையும் சேருங்கள்.
ஒரே ஒரு வாக்கையும் தவற விடாதீர் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ