எஸ்.ஐ.ஆர் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட சதி - மல்லிகார்ஜுன கார்கே
புதுடெல்லி, 27 டிசம்பர் (ஹி.ச.) கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில
எஸ்.ஐ.ஆர் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட சதி - மல்லிகார்ஜுன கார்கே


புதுடெல்லி, 27 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என தற்போதைய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்து 125 என வேலை நாட்களை கூட்டியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய எதிர்ப்பு தேவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) என்பது ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட சதி ஆகும். ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு தொலைநோக்குப் பார்வை திட்டமாகும். அது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. அந்தத் திட்டத்தின் தாக்கத்தின் காரணமாகவே அதற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டது.

மோடி அரசாங்கம், எந்தவித ஆய்வோ, மதிப்பீடோ அல்லது மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனையோ செய்யாமல், அந்த திட்டத்தை அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களின் விஷயத்தில் அவர்கள் செய்தது போலவே இதிலும் செய்துள்ளனர்.

இந்தியாவின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 2015-ல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் கடுமையான எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டன.

அதே போல், தற்போது 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடு தழுவிய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b