Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 13-ஆம் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
20-ஆம் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 27-ஆம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு தூத்துக்குடி மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b