Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது.
ஊதிய முரண்பாட்டை கண்டித்து சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று
(டிசம்பர் 26) காலை 10.30 மணிக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாகனங்களில்
ஏற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக ‘சமவேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இன்று
(டிசம்பர் 27) சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
Hindusthan Samachar / vidya.b