இன்று விஜயகாந்தின் 2 -வது ஆண்டு நினைவு நாள் - குருபூஜை நடத்த தேமுதிக ஏற்பாடு
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.) பிரபல நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்
இன்று விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் - குருபூஜை நடத்த தேமுதிக ஏற்பாடு


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)

பிரபல நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகிறது.

விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று குருபூஜை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதற்காக கோயம்பேடு தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே இருந்து விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணி நடத்தவும் அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருவதாலும் பேரணி நடக்க இருப்பதன் காரணமாகவும் சுமார் 800 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b