அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமான இன்று முதல் விருப்ப மனு விநியோகம்
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.) சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமான இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2026 இல் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்
Admk


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமான இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

2026 இல் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு கடந்த 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 9 நாட்கள் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்தனர்.

சுமார் 1500 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இரண்டாங்கட்டமாக 28 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இன்று இரண்டாம் கட்டமாக விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ