பாஜக மாநில தலைவருக்கு கருப்புக் கொடி காட்டிய பெண் நிர்வாகியால் பரபரப்பு
நீலகிரி, 28 டிசம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை புரிந்து இருந்தார். அப்பொழுது உதகை ஏடிசி பகுதியில் கட்சியை விட்டு கடந்த சில நாட்களுக்க
நயினார் நாகேந்திரன்


நீலகிரி, 28 டிசம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை புரிந்து இருந்தார்.

அப்பொழுது உதகை ஏடிசி பகுதியில் கட்சியை விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட விவசாய அணி துணைச் செயலாளர் வைஷாலி என்பவர் திடீரென நைனார்

நாகேந்திரன் வாகனம் முன்பு கருப்பு கோடி காட்டி மறியல் செய்ய முயன்றார்.

அப்பொழுது சுற்றி இருந்த காவல்துறையினர் அவரை கருப்புக்கொடி காட்டாமல்

கட்டுப்படுத்தினர் இதனை தொடர்ந்து அவர் தனக்கு நியாயம் வேண்டும் என

கோஷமிட்டார் சுற்றி இருந்தால் காவல்துறையினரை மீறி செல்ல முடியாத நிலையில்

அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை தொடர்ந்து அவசர மருத்துவர்கள் வரவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்

பரபரப்பு ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam