Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 டிசம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜனவரி 15, 2026 (வியாழக்கிழமை) அன்று மாநகராட்சி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி அன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைக்க இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் முடிவெடுத்துள்ளது.
புதிய அட்டவணை விவரத்தின்படி ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த இடைநிலைத் தேர்வு (குரூப்-II), தாள்-5: தணிக்கை மற்றும் நெறிமுறைகள் (Auditing and Ethics) பாடம், தற்போது ஜனவரி 19, 2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வை ஒத்திவைக்கக் கோரி இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துக்கு டிசம்பர்18ல் சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் ஜனவரி 15 மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி பொதுத் தேர்தல்களை காரணம் காட்டி சிஏ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b