கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.) மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாள், தேமுதிகவினரால் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன் - முதல்வர்  ஸ்டாலின்


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாள், தேமுதிகவினரால் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு தேமுதிக நேராக சென்று அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 28) எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,

கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்

ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b