Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2026-ல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யும் பணியிலும் அதிமுக ஈடுபட்டு வருகிறது. பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அண்மையில் எடப்பாடியை சந்தித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் டிசம்பர்31-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்ஜிஆர் மாளிகையில், 31.12.2025 காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b