Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 28 டிசம்பர் (ஹி.ச)
கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 28) கடலில் பயணம் செய்தார்.
கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வாஷீரில் குடியரசு தலைவரும், முப்படைகளின் உச்ச தலைவருமான திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.
அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும் பயணம் செய்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு பிறகு நீர்மூழ்கியில் பயணம் செய்த
2-வது இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b