Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
வானத்தைப் போல மனம் படைத்து, இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், பத்ம பூஷன் அன்புச் சகோதரர் கேப்டன் விஜய்காந்த் அவர்களின் நினைவு நாளான இன்று,
சென்னை, தேமுதிக அலுவலகத்தில் உள்ள கேப்டன் ஆலயம் நினைவிடத்தில் நடைபெற்ற 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்வில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன்.
கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ