Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 28 டிசம்பர் (ஹி.ச.)
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையிலிருந்து நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் மூன்று மீனவர்களையும் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து உள்ளனர்.
இந்த மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களை நெடுந் தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த 52 மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / ANANDHAN