Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 டிசம்பர் (ஹி.ச.)
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்யராஜ், தமிழ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நீதிராஜா தொடக்கவுரை நிகழ்த்தினார்.
முன்னதாக, ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மண்டல பொறுப்பாளர் கிறிஸ்டல் ஜீவா, மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் உள்ளிட்டவர்கள் பேசினர்.
மாநாட்டில், ஜனவரி மாதம் நடைபெறும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் அனைவரும் கருப்பு அட்டை அணிந்து முழுமையாக பங்கேற்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN