கன்னியாகுமரி தாணுமாலயன் கோவில் திருவிழாவையொட்டி ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி, 28 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், மும்மூர்த்திகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம் ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோவில் திருவிழாவையொட்டி ஜனவரி 2-ம் தேதி  உள்ளூர் விடுமுறை


கன்னியாகுமரி, 28 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், மும்மூர்த்திகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம் ஆகும்.

அகலிகையால் தேவேந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, இங்கு மும்மூர்த்திகளை வழிபட்டு விமோசனம் பெற்றதால், 'சுசி' தூய்மை+ 'இந்திரம்' இந்திரன் இணைந்து 'சுசீந்திரம்' எனப் பெயர் பெற்றது.

இங்குள்ள உயர்ந்த கோபுரமும், சிற்பங்களும், திருவிழாக்களும் மிகவும் பிரபலம்.

இக்கோயில் திருவிழாவையொட்டி ஜனவரி 2-ம் தேதி அம்மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, ஜனவரி 10-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM