கேரளத்தில் தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய உயா்வு - அரசு விரைவில் வரைவு அறிக்கை
கேரளா, 28 டிசம்பர் (ஹி.ச.) கேரளத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கும் வரைவு அறிக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் வி. சிவன்குட்டி தெரிவித்தார்.
கேரளத்தில் தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய உயா்வு - அரசு விரைவில் வரைவு அறிக்கை


கேரளா, 28 டிசம்பர் (ஹி.ச.)

கேரளத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கும் வரைவு அறிக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் வி. சிவன்குட்டி தெரிவித்தார்.

மருத்துவமனை நிர்வாகங்களின் பிரதிநிதிகளுடன் ஊதியக் கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த 1948-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய சட்டப் பிரிவு 5 (1) (பி)-இன்கீழ் இந்த அறிக்கையை மாநில அரசு பிறப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கேரளத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி நிர்ணயிப்பது தொடர்பாக கடந்த 2023-இல் ஊதியக் கமிட்டி அமைக்கப்பட்டு, பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன.

கடந்த 2013-ஆம் ஆண்டின் அறிக்கையின் அடிப்படையில், குறைந்தபட்ச ஊதியத்தை 60 சதவீதம் உயர்த்தும் துறைசாா் முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன.

அதே நேரம், மருத்துவமனை நிர்வாகங்கள் உடன்படவில்லை.

நிர்வாகங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கருத்தொற்றுமை எட்டப்படாத நிலையில், மேற்கண்ட சட்டத்தின் கீழ் வரைவு அறிக்கை வெளியிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM