காங்கிரஸ் கட்சி கட்டாயம் வலுப்படுத்தப்பட வேண்டும் - எம்பி சசிதரூர்
புதுடெல்லி, 28 டிசம்பர் (ஹி.ச.) புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 140வது நிறுவன நாள் விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்
காங்கிரஸ் கட்சி கட்டாயம் வலுப்படுத்தப்பட வேண்டும் - எம்பி சசிதரூர்


புதுடெல்லி, 28 டிசம்பர் (ஹி.ச.)

புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 140வது நிறுவன நாள் விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். திக் விஜய் சிங் அருகில் அமர்ந்தபடி, எம்பி சசிதரூரும் நிகழ்வில் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் எம்பி சசிதரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

எங்களுக்கு 140 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. அதில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். நம்மிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். கட்சி கட்டாயம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

திக்விஜய் சிங் எனது நண்பர். நாங்கள் இதுபற்றி உரையாடுவது இயற்கையான ஒன்றே.

கட்சியில் ஒழுக்கம் இருக்க வேண்டும்.

அவர் (திக்விஜய் சிங்) அவருக்காக மட்டுமே பேச முடியும்.

இவ்வாறு சசிதரூர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b