Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
உடல்நல குறைவு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
நல்லக்கண்ணு மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 26 ம் தேதியன்றுடன்
100 வயதை கடந்த நல்லக்கண்ணு., அவ்வப்போது ஏற்படும் சுவாச கோளாறு காரணமாக., ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்., மீண்டும் சுவாச கோளாறு ஏற்பட்டதால்.,
நேற்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டவர் 1 ல் மூன்றாம் தளத்தில்
132 வது சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
தொண்டை வழியாக டியூப் மூலம் ஆகாரம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம்., இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ