Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.
இந் நிலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது;
தமிழக அரசியல் வரலாற்றில் கேப்டன் என்று கூறினால் அது விஜயகாந்த் மட்டும்தான், பொது வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், ரசிகர்கள் மத்தியிலும், தனக்கென முத்திரையை பதித்தவர்.
மாபெரும் தலைவர்கள் வரிசையில் கேப்டனும் இருப்பார்.
அவரது மறைவு இயக்கத்திற்கு மட்டுமல்ல எங்களுக்கும் பேரிழப்பு.
அம்மா உடன் கூட்டணி வைத்து இருந்தபோது அவருடன் பழகிய நினைவுகள் என்றும் நினைவில் இருக்கும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam