சேலத்தில் நாளை நடைபெற உள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது - வழக்கறிஞர் பாலு
மயிலாடுதுறை, 28 டிசம்பர் (ஹி.ச.) மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக வழக்கறிஞர் பாலு அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாமகவின் தேர்தல் பணிகள் வாக்குச்சாவடி வாரியாக நடைபெற்று வருகிறது. பாமக இடம்பெறும் க
Advocate Balu


மயிலாடுதுறை, 28 டிசம்பர் (ஹி.ச.)

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக வழக்கறிஞர் பாலு அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பாமகவின் தேர்தல் பணிகள் வாக்குச்சாவடி வாரியாக நடைபெற்று வருகிறது.

பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும். அதற்கான வியூகங்களை அன்புமணி வகுத்து வருகிறார். கட்சி முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று கூறியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்தரப்பினர், நாள்தோறும் எங்கள் மீது பல்வேறு வதந்திகளையும், விமர்சனங்களையும் பரப்பி வருகின்றனர்.

எங்கள் நோக்கம் தமிழகத்தில் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதுதான். அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே ஒரே இலக்கு. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். சமூக நீதி அரசு என்று சொல்லும் திமுக, சமூக நீதிக்காக இதுவரை துரும்பை கூட தூக்கிப் போடவில்லை” என்றார்.

மேலும், “ 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் தலைவர் அன்புமணி ராமதாஸ் முடிவெடுப்பார். 2026 ஆகஸ்ட் மாதம் வரை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்ற அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மீது அவர்கள் (ராமதாஸ் தரப்பினர்) எப்போது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தவறான செய்திகளை பரப்பி குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜி.கே.மணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்காக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது ஜி.கே. மணிக்குதான். அறிவாலயம் சொல்வதை ஜி.கே.மணி செய்து வருகிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சிலரால் வழிநடத்தப்படுகிறார். எழுதிக் கொடுப்பதை ஊடகங்கள் வாயிலாக பேசி வருகிறார்,எனவும் விமர்சித்தார்.

வரும் 29 ஆம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு நடத்த முயற்சி செய்து வருகிறார். இது சட்டவிரோதமானது. இந்த பொதுக்குழுவை நடத்த அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பொதுக்குழுவின் தீர்மானங்கள் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது. கட்சியினர் இடையே எந்த குழப்பமும் இல்லை. கட்சி முழுவதும் அன்புமணி ராமதாசிடம் உள்ளது. கட்சியை வருங்காலத்தில் அன்புமணி தான் வழிநடத்த முடியும்.

கொடியை பயன்படுத்தக்கூடாது, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்கிற எந்த கட்டுப்பாடும் எங்களுக்கு கிடையாது. அது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு உள்ள பொதுவான விதி. நாங்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அட்சி. எங்களுக்கு எந்த கட்டுப்பாடும், விதியும் கிடையாது.

நாங்கள் இரு அணிகள் அல்ல; ஒரே அணிதான். கூட்டணி குறித்து எங்கள் அண்புணி ராமதாஸ் முடிவெடுப்பார் என்று வழக்கறிஞர் பாலு கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN