Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்வதற்காக., சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர்., சென்ட்ரல் ரயில் நிலைய பயணிகள் காத்திருக்கும் இடத்தில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் ஜார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் திருடு போனது குறித்து சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் ரவிசங்கர் புகார் அளித்தார்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையோட அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ரவிக்குமார் என்பவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
செல்போனை திருடியதை ஒப்பு கொண்ட ரவிக்குமார்,மனைவி மகள் இல்லை பிரிந்து சென்று விட்டனர் வாழ்க்கை வாழ பணம் தேவை என்பதால் இது போன்று செல்போனை திருடி விற்ற பணத்தில் செலவு செய்து வந்ததாகவும், என்ன செய்வது இதுபோல திருட்டு தொழிலில் ஈடுபட்டு செல்போனை திருடி வந்ததாக வாக்கு மூலம் அளித்ததாக, ரயில்வே போலீசார் தகவல் அளித்தனர்.
மேலும் நடத்திய விசாரணையில்.,
எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்று செல்போன்களும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு செல்போனும் திருடியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில்., திருடு போன செல்போனை பறிமுதல் செய்த சென்னை ரயில்வே போலீசார், முறைப்படி கைது செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ