இந்து விரோத தீய சக்திகளிடம் இந்த அறநிலையத்துறை சிக்கிக் உள்ளது - எச்.ராஜா
தேனி, 28 டிசம்பர் (ஹி.ச.) அமைச்சர் சேகர்பாபு போன்ற ஹிந்து விரோத தீய சக்திகளிடம் இந்த அறநிலையத்துறை சிக்கிக் உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் மலை மீது பழமையான வெங்கடா
எச். ராஜா


தேனி, 28 டிசம்பர் (ஹி.ச.)

அமைச்சர் சேகர்பாபு போன்ற ஹிந்து விரோத தீய சக்திகளிடம் இந்த அறநிலையத்துறை சிக்கிக் உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் மலை மீது பழமையான வெங்கடாசலபதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயிலை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்ற பிறகு கோயிலில் அபிஷேக பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட முடியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மலை மீது உள்ள கோயிலுக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வருகை தந்து மலை மீது ஏறி கோயிலில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது;

இந்த அறநிலையத்துறை வந்த பிறகு இந்தக் கோயிலில் பொதுமக்கள் அபிஷேகம் செய்து

வழிபட முடியாமல் தவித்து வருகின்றனர் ஹிந்து விரோத தீய சக்திகளிடம் இந்த அறநிலையத்துறை சிக்கிக் உள்ளது என தெரிவித்தார்.

சனாதானா ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா கொசு போன்ற அளிக்க வேண்டும் என

உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார் அந்த டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கலே திமுக

அரசும் சேகர் பாபுவின் தான் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மலை மேல் உள்ள பெருமாள் கோயிலில் தனியார் கல்லூரி மற்றும் தர்கா சார்பில் அரசாங்கம் கொடுத்த நிலத்தினை விட கோயிலில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்துக்கள் இங்கு முழுமையாக பூஜை செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam