தமிழகத்தின் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் இன்று 2- வது நாளாக எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாம்!
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான (எஸ்ஐஆர்) கணக்கெடுப்பு பணிகள் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்றன. அதை தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக வரைவ
தமிழகத்தின் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் இன்று எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாம்


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான (எஸ்ஐஆர்) கணக்கெடுப்பு பணிகள் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்றன. அதை தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் நீக்கப்பட்டவர்களில் தகுதி உள்ளவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், டிச.26-ம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.85 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தகுதி உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிச.27, 28-ம் தேதிகள் மற்றும் ஜன.3, 4-ம் தேதிகள் என 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில், பெயர் நீக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். இன்றும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் (டிசம்பர் 28) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக்கூடிய ஆவணத்தை விசாரணையின்போது வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதிவாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.

மேலும், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, இந்த நடைமுறை குறித்துவிளக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b