Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 டிசம்பர் (ஹி.ச.)
பல்வேறு காரணங்களால், இந்திய ராணுவத்தினர், துணை ராணுவப்படைகள் மற்றும் மாநில போலீசார் கண்ணிவெடி, வெடிக்காத குண்டுகள் உள்ளிட்டவற்றை கையாள வேண்டிய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இது போன்ற சூழல்களை கையாள்வதற்கு உரிய வழிமுறைகளை வகுக்கப்பட வேண்டியது அவசியமாக இருந்தது.
இதற்கென 3 வகையான வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளை இந்திய பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றை பல்வேறு தனியார் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளை தயாரித்து வந்தன. இவற்றுக்கான தர நிர்ணயம் என்பது இதுவரை இல்லாமல் இருந்தது.
இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் கோரிக்கையின் பேரில் உருவாக்கப்பட்ட இந்தத் தரத்தை 'IS 19445:2025' என்று அழைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பாராட்டப்படக் கூடிய அளவில் இந்தத் தரம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கும் வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புக்கு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM