கைது செய்யப்பட தமிழக மீனவர்கள் 3 பேருக்கு ஜன 7, வரை நீதிமன்றக் காவல் விதித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையிலிருந்து நேற்று (டிசம்பர் 27) கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் மூன்று மீனவர்களையும் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து உள்ளனர். இந்த மீனவர்கள் நெடுந்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 3 பேருக்கு ஜன.7 வரை நீதிமன்றக் காவல் விதித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையிலிருந்து நேற்று (டிசம்பர் 27) கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் மூன்று மீனவர்களையும் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து உள்ளனர்.

இந்த மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்களை நெடுந் தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 3 பேருக்கு ஜன.7 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது.

இலங்கை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b