ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச) மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரரா
Tan


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,

மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் க்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

மாநில தலைவராக இருந்த போது கூட்டணி பற்றி பேச அவரை சந்திக்க வந்துள்ளேன் என்னை வாய் நிறைய தங்கச்சி என்று அழைப்பார்.

என்னை தங்கச்சி என உரிமையோடு அழைப்பவர்களில் அவரும் ஒருவர் தன் கட்சி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதேபோல இந்த தங்கச்சி மீது பாசம் வைத்தவர்.

தூய்மையான மனிதர் அரசியலில் மிக நேர்மையானவர் துணிச்சல் ஆனவர்.

அவர் நீண்ட ஆயுளோடு இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து பிரேமலதா அவர்கள் விஜயகாந்த் கொள்கைகளை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார்.

அவர் என்ன நினைத்தாரோ தூய்மையான அரசியல் வரவேண்டும் என்று நினைத்தார்.

அவரது நினைவு நாளில் அது நினைவாக்கப்பட வேண்டும் என எங்களது கனவு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு செல்லும் போதும் அவர் மீண்டு வந்து விடுவார் என வேண்டி இருக்கிறேன் தனிப்பட்ட முறையில் ஒரு சகோதரர் இழந்த சோகம் என்னிடம் உள்ளது என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் தான் விஜய்க்கு பாதுகாப்பு என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்தான கேள்விக்கு,

எதிரணியின் ஓட்டுகள் கூட்டாக இருக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ