Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 28 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆதவன்.
விவசாயியான இவர் தனது நிலத்தைச் சமன் செய்தபோது எதிர்பாராத விதமாக ஒரு புதையல் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
அதாவது ஒரு பழங்காலக் குடுவையில் 86 தங்கக் காசுகளை ஆதவன் கண்டெடுத்துள்ளார்.
ஆனால் தங்கப் புதையல் கிடைத்ததை அவர் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.
ஆனால் அவர் தங்கப் புதையல் கண்டெடுத்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் விரைந்து வந்து ஆதவனிடம் இருந்த தங்க நாணயங்களை கைப்பற்றினார்கள்.
அந்த தங்க நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தது? என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
1878ம் ஆண்டு இந்திய புதையல் சட்டத்தின் படி ஒருவருக்குப் புதையல் கிடைத்தால் அவர் உடனடியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியரிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
அந்தப் புதையலை மறைப்பதோ அல்லது ரகசியமாக விற்பனை செய்வதோ சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும்.
Hindusthan Samachar / ANANDHAN