வாழ்ந்தாலும் மறைந்தாலும் தாய்மார்கள், இளைய தலைமுறை மனதில் என்றும் இருப்பவர் விஜயகாந்த் - வேல்முருகன்
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.) மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன
வேல்முருகன்


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசியபோது,

அன்புக்குரிய நண்பர் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

தேமுதிக நிர்வாகிகள் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தி வருகின்றனர்.

தேர்தல் காலத்திலும் கூட எந்த பாகுபாடும் இல்லாமல் பெரும்பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி சென்றுள்ளனர்.

விஜயகாந்த் நல்ல மனம் கொண்ட ஏழை மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

தலைகனம், ஆணவம் இல்லாத நபர், மாற்று அரசியல் கட்சி தலைவர்களிடம் மரியாதையுடன் அன்போடு நடத்தியது மெய் சிலிர்க்கிறது.

அவர் தொடங்கிய கட்சி ஆட்சியில் இருக்கிறதோ இல்லையோ பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து மரியாதை செய்கின்றனர்.

வாழ்ந்தாலும் மறைந்தாலும் தாய்மார்கள், இளைய தலைமுறை மனதில் இருக்க வேண்டும் திரை உலகிலும் அரசியல் வாழ்விலும் இருக்க வேண்டும் என்று மனதில் விதைத்து சென்றுள்ளார்.

வெறும் திரைப்பட நடிகர் திரைப்பட சங்க தலைவர் மட்டுமல்ல ஏழை மக்களின் விருப்பத்தை உணர்ந்து உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடியவர்.

தொண்டர்களுக்கு அன்பு காட்ட வேண்டிய இடத்தில், நற்பண்புகளை எடுத்து காட்டியவர். நான் கேப்டன் அவர்களின் மீது விமர்சனம் செய்த போது கூட அதை ஒரு பக்கம் வைத்து என்.எல்.சி போராட்டத்தில் என்னுடன் கை கோர்த்தவர்.

நல்ல புரிதல் உள்ள அற்புதமான மனிதனை இழந்தாலும் அவர் புகழ் தமிழ் சமூகத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு உண்டு என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ