Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 டிசம்பர் (ஹி.ச.)
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது;
இந்த போராட்டம் மூன்று நாட்களாக அல்ல நீண்ட காலமாக கோரிக்கை வைத்து ஆசிரியர்கள் போராடுகிறார்கள் பக்கத்தில் நேரம் ஆசிரியர்கள் சம வேலை சம உதவியும் கேட்டு போராடுகிறார்கள்.
இத்துடன் 14,000 மேற்பட்ட ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனத்திற்காக காத்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் கடந்த ஆட்சியில் நடந்த போது முதல்வர் அப்போது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தார்.
அதை நிறைவேற்றுவார் என்று பார்த்தால் ஆட்சியை முடிந்துவிட்டது. இதுவரை நிறைவேற்றவில்லை மறுபடியும் அந்த கோரிக்கையை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளையனிடம் விடுதலை கேட்டு போராடும் ஜனநாயகத்தை நான் வைத்திருந்தால் விடுதலைப் பெற்ற நாட்டில் ஆசிரியர்கள் வீதியில் நின்று போராடினார்கள் அதற்கு அனுமதி கொடுத்தீர்களா அதற்கு பேச்சுவார்த்தை நடந்ததா அடித்து துன்புறுத்தி வண்டியில் ஏற்றுகிறார்கள்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பணி நியமன ஆசிரியர்கள் பணி நிரந்தர ஆசிரியர்கள் போராடுகிறார்கள். இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் அல்லது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அனைவரையும் தெருவில் நிறுத்திவிட்டு நல்லாட்சி என்றால் எப்படி. 50 மதிப்பெண்களுக்கு ஐந்து கேள்விகளை பதிலாக எழுத சொல்லி கேட்கிறார் விட மாட்டார்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய மாட்டார்கள் இந்த திட்டத்தை பாராட்டி எழுதினால் அவனைத் தேர்வு செய்வீர்கள் இதில் கிடைக்கிறது யார் ஆதரவாளர் கட்சி என்று. இது எந்த மாதிரி ஒரு ஆட்சி.
முதல்வர் காலை உணவுத் திட்ட கேள்விக்கு தாக்கம் இல்லை என்று சொன்னால் என்னை தேர்ச்சி பெற விட மாட்டீர்கள். மாற்றி எழுதினால் என்னைத் தேர்வு செய்து வேலைக்கு சேர்ப்பீர்கள். மகளிர் உரிமைத்தொகை 900 கோடி 12,000 கோடி இழக்கிறது. கேட்பதில் கொடுக்காமல் கேட்காததற்கு 12,000 கோடி.
உதவி பேராசிரியர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகள். இந்த கேள்விகள் சரியில்லை என்று நான் எழுதினால் வேலை கிடைக்குமா.
பொங்கல் பரிசு தொகுக்கு உங்கள் சொத்தை விற்று கொடுக்கிறீர்களா. 10 லட்சம் கோடி கடன் வந்ததற்கு விளக்கம் சொல்ல முடியுமா. கடனை வாங்கி கொடுத்து விட்டேன் நீங்கள் செத்து விடுவீர்கள் ஒருவர் தலைமையிடம் லட்ச ரூபாய் கடன் உள்ளது. கொண்டாட முடியவில்லை அவ்வளவு தூரத்திற்கு ஏழ்மையான நிலையில் எங்களை வைத்திருக்கிறீர்கள்.
பொங்கலுக்கு பரிசு பணம் கொடுப்பது. இது ஓட்டை பறிக்கும் வேலை. நாட்டை காப்பாற்றும் வேலை இல்லை.
என்ன தொழிற்சாலை கொண்டு வருவீர்கள் பெருந்துறையில் 26 கிலோ மீட்டருக்கு தண்ணி எடுக்கக்கூடாது ஒன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். தஞ்சாவூர் எல்லாருக்கும் சிறுநீர் பாதிக்கப்பட்டுள்ளது காரணம் மீதேன் எடுத்தது. என் தம்பி குடும்பத்தில் மூன்று பேர் இதனால் இறந்திருக்கிறார்கள்.
விளைநிலத்தை பறித்து தொழிற்சாலை தொடங்கினால் சாப்பாடு எங்கிருந்து வரும். சிப்காட் தொழிற்சாலைக்குள் ஊடகம் செல்ல முடியுமா. 26 கிலோமீட்டர் தண்ணீர் கெட்டு விட்டதாக சொல்கிறார்கள் அதற்கு மேல் உள்ள தண்ணீராவது நல்லா இருக்கிறதா.
அரசு பேருந்து என்ன ஆனது தனியார் பேருந்தை அரசு வாடகை கிடைத்தால் எதற்கு இந்த அரசு. அரசிடம் தனியார் முதலாளி கடன் கேட்கலாம் ஆனால் அரசு தனியார் முதலாளியிடம் வண்டி கேட்கிறது.
தேர்தல் அறிக்கை இல்லை ஆட்சி நடத்துவது குறித்து வரைவு விரைவில் வெளியாகும்.
தமிழ்நாடு போக்குவரத்தில் மட்டும் இல்லை கருணாநிதி இருந்தபோது சேரன் சோழன் பாண்டியன் என்று இருந்தது அதையெல்லாம் தூக்கிவிட்டு தமிழ்நாட்டையும் தூக்கி விட்டு அரசு பேருந்து என்று உள்ளது அரசு பள்ளி என்று தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பள்ளி பேருந்து விடுதி என்று இல்லை. டாஸ்மாக்கில் மட்டும் தமிழ்நாடு என்று உள்ளது.
தமிழ்நாடு என்று இருப்பதே உங்களுக்கு அவமானமாக உள்ளது. எந்த அரசு கர்நாடகா ஆந்திராவா குஜராத்தா எந்த அரசு. வேண்டுமென்றால் திராவிட அரசு என்று கூட போட்டுக் கொள்ளுங்கள்.
மதுரையில் நான்காம் தமிழ் சங்கம் நடத்தியது பாண்டித்துரை தேவர் மதுரையில் உள்ள நூலகத்திற்கு ஏன் அவர் பெயரை வைக்கவில்லை.
ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். காளை வளர்த்தாரா, அடக்கி காயம் பட்டாரா. அங்கு மைதானம் கட்டியதற்கு கலைஞர் பெயர் வைத்திருக்கிறார்கள். மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கக் கூடாதா. தமிழ்த்தாயின் சிலையை எதற்கு நீக்கினீர்கள். எங்கள் அடையாளங்களை நிறுவி உங்கள் அடையாளத்தை அழிக்க துடிப்பது என்ன தவறு.
வாழ்க்கையில் ஜெய்ப்பதற்கு நல்ல எதிரி வேண்டும் எல்லோரையும் எதிர்க்க முடியாது என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, அது சரிதான், அவர் ஒரு எதிரியை தீர்மானித்து வைத்திருக்கிறார், எங்களுக்கு கோட்பாட்டு எதிரி. இந்தியும் திராவிடமும். அந்த வலிமையான எதிரி யார் என்பதை அவரிடம் கேளுங்கள்..!
நான் எட்டு கோடி மக்களுடன் கூட்டணி வைத்து சந்திக்கிறேன் எந்த கட்சி கூட்டணியும் தேவையில்லை.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam