ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் விஜயகாந்த் நினைவு கூறப்படுவார் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச) விஜயகாந்த் நினைவு நாள்: ஆண்டுகள் கடந்தாலும் மனிதநேயத்திற்காக மக்களால் நினைவு கூறப்படுவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தே
Anbumani


Tw


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)

விஜயகாந்த் நினைவு நாள்: ஆண்டுகள் கடந்தாலும்

மனிதநேயத்திற்காக மக்களால் நினைவு கூறப்படுவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை.

மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர்.

ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார்.

இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ