Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று
(டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகிறது.
விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் நேரில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, சீமான், உள்ளிட்டோர் நேரில் மரியாதை செலுத்தினர்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் மரியாதை செலுத்தினார்.
விஜயகாந்தின் நினைவிடத்தில் திமுக சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b