Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 29) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29.12.2025, திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம். செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b