புதுக்கோட்டையில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய 14 பேர் கைது - ரூ.10 லட்சம் பறிமுதல்
புதுக்கோட்டை, 29 டிசம்பர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிராதமாக சீட்டு விளையாடுதல் போன்ற செயல்கள் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அறந்தாங்கி டிஎஸ்பி சரவணன், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்ட
புதுக்கோட்டையில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய 14 பேர் கைது - ரூ.10 லட்சம் பறிமுதல்


புதுக்கோட்டை, 29 டிசம்பர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிராதமாக சீட்டு விளையாடுதல் போன்ற செயல்கள் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அறந்தாங்கி டிஎஸ்பி சரவணன், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் தலைமையில் அறந்தாங்கி போலீசார் மறமடக்கி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மறமடக்கி கிராமத்தில் ஆர் எஸ் பதி காட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் கட்டுக் கட்டாக பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய போது அதிரடியாக அங்கு புகுந்த அறந்தாங்கி போலீசார் சீட்டு விளையாடிய 14 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10,09,670 ரொக்கம் மற்றும்18 செல்போன்கள், 17 இருசக்கர வாகனங்களை அறந்தாங்கி போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து 14 பேரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b