ஆந்திராவில் எட்டு பேரை ஏமாற்றிய ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு
அமராவதி, 29 டிசம்பர் (ஹி.ச.) ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வாணி, தனது அத்தை சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில், வாணிக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அண
ஆந்திராவில் எட்டு பேரை ஏமாற்றிய ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு


அமராவதி, 29 டிசம்பர் (ஹி.ச.)

ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வாணி, தனது அத்தை சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், வாணிக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் இந்த தம்பதி ரெயிலில் பயணம் செய்தபோது, விசனிங்கபுரம் ரெயில் நிலையத்தில் வாணி மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அவர் தனது அத்தை சந்தியாவின் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து கணவர் வீட்டார் ஸ்ரீகாகுலம் சென்று பார்த்தபோது வாணியும், அவரது அத்தையும் தலைமறைவாகி விட்டனர் என்பது தெரிய வந்தது.

மேலும், வாணி இது போல் ஏற்கனவே பலரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற விஷயம் தெரிந்து கணவர் வீட்டார் அதிரச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது வாணியும், அவரது அத்தையும் இதே பாணியில் 8 பேரை ஏமாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பிவிடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது தலைமறைவாக இருக்கும் வாணி மற்றும் சந்தியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM