ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம் – பழைய தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச) டெல்லிக்கு அருகில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான புதிய வரையறையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் சட்டவிரோத மற்றும் முறைப்படுத்தாத சுரங்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும், ஆரவல்லி மலைத் தொடரின் சு
ஆரவல்லி மலைத்தொடர்


புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச)

டெல்லிக்கு அருகில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான புதிய வரையறையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் சட்டவிரோத மற்றும் முறைப்படுத்தாத சுரங்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும், ஆரவல்லி மலைத் தொடரின் சுற்றுச் சூழல் அமைப்பு பாதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் அந்த வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை தொடர்பான பழைய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.

அதுமட்டுமில்லாமல், மத்திய அரசு பரிந்துரைகளையும், சுரங்கப் பணிகளையும் நிறுத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், ஆரவல்லி மலைத்தொடர் குறித்து ஆராய புதிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி, மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Hindusthan Samachar / GOKILA arumugam