நாளை முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல
நாளை முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதே போல வருகிற 2-ம் தேதி, 3-ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM