Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)
தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி, பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 23ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்திருந்தார்.
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த 6 நாட்களில் இதுவரை 38,950 பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் தஞ்சை மாநகரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, உலகை ஆண்ட சோழர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கவும், அந்தக் காலத்து கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களைப் பாதுகாக்கவும் ரூ.51 கோடியில் தஞ்சை மாநகரில் அமைக்கவும் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b