Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 டிசம்பர் (ஹி.ச.)
கோவை காந்திபுரம் ஓலா பிரத்யேக விற்பனை மையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட எஸ் ஒன் ப்ரோ 4680 பாரத் செல் பேட்டரி ஓலா பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு 100 பேருக்கு ஓலா ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டன.
ஓலா ஏரியா மேனேஜர் ஸ்ரீராம் கோயம்புத்தூர் ஷோரூம் மேனேஜர் சந்தோஷ் புதிய ஓலா ஸ்கூட்டர் நவீன தொழில்நுட்பத்தில் உருவான பேட்டரியுடன் கூடிய சாவியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விற்பனை தொடக்கி வைத்தனர்.
பின்னர் புதிய ஸ்கூட்டர் குறித்து கூறியதாவது.
இன்று கோயம்புத்தூர், கொச்சி மற்றும் ஹைதராபாத் முழுவதும் டெலிவரிகளைத் தொடங்கியது.
மேலும் பெங்களூருவில் தொடர்ந்து ரேம்ப்-அப் தொடர்கிறது. S1 Pro+ (5.2 kWh) என்பது நிறுவனத்தின் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் முதல் தயாரிப்பு ஆகும், இது அதிக வரம்பு, அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
வாகனங்களில் அதன் சொந்த 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகள் மூலம், ஓலா எலெக்ட்ரிக் இப்போது செல் மற்றும் பேட்டரி பேக் உற்பத்தி செயல்முறையை முழுமையாக சொந்தமாக வைத்திருக்கும்.
நகர் மற்றும் ஊரகப்பகுதியில் ஒரு பேட்டரி மூலம் 300 கிலோமீட்டர் பயணிக்கலாம். அனைத்து பாதுகாப்பு வசதிகளும் புதிய வாகனத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam