Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 29 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் சுமார் 30 நிமிடம் காலதாமதமாக வந்த நிலையில் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தேசிய கீதத்தை அவமதித்து மேடையில் இருந்து வெளியேறினார்.
அவரை சம்மதனம் படுத்த முற்பட்ட ஆட்சியரிடம் எனக்கு முன்னாடி open பண்ணிட்டா நான் என்ன செத்துட்டேன்னு நினைச்சீங்களா என திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் கேட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam