டெல்லியில் தெரு நாய்களை கணக்கெடுக்க ஆசிரியர்கள் நியமனம் -ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்!
புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச.) தெருநாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முதற்கட்டமாக நாய்களின் எண்ணிக்கையை கணக்கிட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தெருநாய்களை கணக்கெடுப்ப
தெருநாய்


புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச.)

தெருநாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முதற்கட்டமாக நாய்களின் எண்ணிக்கையை கணக்கிட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தெருநாய்களை கணக்கெடுப்பதற்கான பயிற்சி அளிக்க கல்லூரி பேராசிரியர்களை நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தெருநாய்களை எண்ணத் தொடங்கினால், மாணவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? ஆசிரியர்களின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் என்னவாகும்? என ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam