Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் லெக்கான் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு, சில்லறை விற்பனையில் ஒரு முட்டை எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் மொத்த விற்பனையில் 7 ரூயாய் 50 காசுகளுக்கு லெக்கான் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விலையில் பண்ணை நாட்டு கோழி முட்டை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்கிறது, மொத்த விற்பனையில் 12ரூபாய் முதல் 13 வரை விற்பனையாகிறது. ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும் தீவனம் விலையேற்றம் காரணமாகவும் பண்ணைகளில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு முட்டைகளை கொண்டுவருவதில் லாறி செலவு, டோல் கட்டண உயர்வு, ஏற்றி இறக்கும் கூலி செலவுகள் அதிகரித்துள்ளதால் சென்னையில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
அதேபோல் காடை முட்டை 12பீஸ் 60 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் வான்கோழி மற்றும் வாத்து கோழிகளின் முட்டை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 7கோடிவரை முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் சுமார் 1கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது, 70 முதல் 80லட்சம் முட்டை சத்துனவுக்காக கொடுக்கப்படுகிறது.
மீதமுள்ள முட்டைகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்காக
கொண்டுச்செல்லப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ