வீட்டின் பீரோவை உடைத்து 26 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
விழுப்புரம், 29 டிசம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள விநாயகபுரம் கணபதி நகர் பகுதியை சார்ந்த பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் மெக்கானிக் ஷேக் முபாரக் (54) என்பவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ந
Gingee Police Station


விழுப்புரம், 29 டிசம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள விநாயகபுரம் கணபதி நகர் பகுதியை சார்ந்த பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் மெக்கானிக் ஷேக் முபாரக் (54) என்பவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நெய்வேலி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 சவரன் தங்க நகை மற்றும் 1 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஷேக் முபாரக் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு

(Crime No: 572/25) செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN