Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 29 டிசம்பர் (ஹி.ச.)
விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமும், ஹோட்டல் ரேடிசன் ப்ளூவும் இணைந்து, 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக 'ஹபிபி - அரேபியன் நைட்ஸ்' என்ற பிரம்மாண்ட விழாவை வரும் டிசம்பர் 31-ம் தேதி நடத்துகின்றன.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கங்கா தேவராஜன் கலந்துகொண்டு விழா பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, அலங்காரங்கள் முதல் உணவு வரை அனைத்தும் அரேபிய மற்றும் இந்திய கலாச்சாரங்களின் கலவையாக இருக்கும்.
விழாவில் மூன்று சிறந்த டிஜேக்கள்,ரஷ்யாவிலிருந்து வரும் பெல்லி நடனக் கலைஞர்கள் மற்றும் கோயம்புத்தூரின் 'ஷீ யூனிட்' குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பார்வையாளர்களுக்கு அரேபிய மற்றும் இந்திய உணவுகள் கலந்த இரவு உணவு,மற்றும் பானங்கள் தடையின்றி வழங்கப்படும்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J