இன்று காலை டெல்லி மற்றும் ஜம்முவில் கடும் பனிமூட்டம் காரணமாக இண்டிகோ விமானங்களின் பயண அட்டவணைகள் மாற்றியமைப்பு
புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச.) இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ), இன்று காலை டெல்லி மற்றும் ஹிண்டன் விமான நிலையங்களிலும், ஜம்மு விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டம் நிலவியதாகத் தெரிவித்துள்ளது. பார்வைத
இன்று காலை டெல்லி மற்றும் ஜம்முவில் கடும் பனிமூட்டம் காரணமாக இண்டிகோ விமானங்களின் பயண அட்டவணைகள் மாற்றியமைப்பு


புதுடெல்லி, 29 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ), இன்று காலை டெல்லி மற்றும் ஹிண்டன் விமான நிலையங்களிலும், ஜம்மு விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டம் நிலவியதாகத் தெரிவித்துள்ளது.

பார்வைத்திறன் ஏற்ற இறக்கமாக இருந்ததால், விமானங்களின் பயண அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வானிலை சீரடையும்போது நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவனம் இந்தத் தகவலை எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரு பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது. ஜம்முவிலிருந்து மற்றும் ஜம்முவிற்கான சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் அது கூறியுள்ளது.

பயணிகள் தங்கள் விமானத்தின் நிலவரத்தை http://bit.ly/3ZWAQXd என்ற இணையதளத்தில் சரிபார்க்குமாறு இண்டிகோ அறிவுறுத்தியுள்ளது.

தங்களின் விமானப் பயண நேரம் பாதிக்கப்பட்டால், அவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது https://goindigo.in/plan-b.html என்ற இணையதளத்தில் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

தேவையான உதவிகளை வழங்க விமான நிலையத்தில் குழுக்கள்தயாராகஉள்ளன.

இவ்வாறுஇண்டிகோ தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM