Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபுஆய்வு மேற்கொண்டார்.
கொளத்தூர், ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா பகுதியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியது,
வடசென்னை மக்கள் உடல் உழைப்பை தருகின்ற மக்கள்.
சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்காமல் உழைக்கும் மக்கள் வட சென்னை மக்கள். வடசென்னை மக்களுக்காக ரூபாய் 6000 கோடி அளவிற்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 250க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடசென்னை மக்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் செய்து தரும் முயற்சிகள் ஈடுபட்டுள்ளோம். என்றார்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்பவர்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தவறுகளை இரும்பு கரம் கண்டு தடுக்கும் முதலமைச்சரின் கை துருப்பிடித்து போய் இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு,
காமாலை கண்ணு கொண்டவனுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள் என்று சொல்லுவார்கள், நயினார் நாகேந்திரன் அவர் இருக்கும் கட்சியில் இன்னும் டேக் ஆப் ஆகவில்லை.
அவர் லிப்ட் ஆகவில்லை அதனால் தான் இது போன்று தாவது பேசிக் கொண்டு உள்ளார்.
நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினைவாதம் தமிழகத்தில் எடுபடாது.
தமிழகத்தில் சட்டஒழுங்கு முழுகடுபாட்டில் உள்ளது என்பதை நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன். என்றார்.
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மத்திய அரசு மாற்றி இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளாரே என்பது குறித்த கேள்விக்கு,
எடப்பாடி பழனிச்சாமி முழுவதுமாக பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளார்.
எனவே பாஜக கொண்டு வருகின்ற எந்த திட்டத்தையும் அவர் புகழ்ந்து பேசுவார்.
அவர் பிடித்தால் பிள்ளையார் மற்றவர்கள் எடுத்தால் சாணம் என்ற கணக்கில் அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். என்றார்.
திமுக ஆட்சி ஊழல் ஆட்சி,பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சி,குடிகார ஆட்சி கடன் கார ஆட்சி என தொடர்ச்சியான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைக்கிறார் என்ற கேள்விக்கு,
தமிழகத்தின் பொறுப்புள்ள அரசியல் கட்சிகள், கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்களின் விமர்சனங்களை கேள்வியாக கேட்டால் அதற்கு பதில் சொல்லலாம். யார் யாரோ பேசி விட்டு செல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
வந்ததை தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்களுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. என்றார்.
தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் தான் போட்டி நடக்கிறது என சீமான் சொல்லியுள்ளார் என்ற கேள்விக்கு,
அண்ணன் சீமான் அவர்கள் எதையாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். அப்போதுதான் அவர் களத்தில் இருக்கிறார் என்று தெரியும். பேசியதை மாற்றி மாற்றி பேசக்கூடிய ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் சீமான் தான்.
அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லை எனக் கூறி அரசு பேருந்துகளில் நாம் தமிழர் கட்சியினர் ஸ்டிக்கர் ஓட்டுகின்றனரே,
சீமான் அவர்கள் தனியார் பேருந்துகளில் பார்த்துவிட்டு தமிழ்நாடு என்று வார்த்தை இல்லை என சொல்கிறார் என நினைக்கிறேன். அரசு பேருந்துகளில் எல்லாம் தமிழ்நாடு என்று தான் உள்ளது.
பிரயோஜனமான கேள்விகளை கேளுங்கள் என செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ