Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச)
சென்னை பார்த்தசாரதி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, 6 துணை ஆணையர்கள் மேற்பார்வையில் ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசருக்கு உதவியாக 200 ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கோயில் பின்புறம் உள்ள பாரதியார் இல்லத்தில் மினி காவல் கட்டுப்பாட்டறை செயல்பட்டு வருகிறது.
அதேபோல் 96 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் 64 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே உள்ளது.
கோயிலின் வெளியே 32, கண்காணிப்பு கேமராக்கள் தற்காலிகமாக பொருத்தப்பட்டது.
கேமரா உதவியுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவில் வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் தயார் நிலையில் மருத்துவ குழுவினர் இருப்பர். ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
கோயிலை சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில் உள்ளேயும் வெளியேயும் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயிலை சுற்றி கண்காணிப்பு கோபுரங்களும்( watch tower) அமைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ