Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச)
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் நேற்று மூன்றாவது நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டம் செய்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வடக்கு கடற்கரை போலீசார் 1,046 ஆசிரியர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போராடிய 2000 கும் மேற்பட்ட ஆசிரியர்களின் மீது வழக்கு பதிந்துள்ள நிலையில் நேற்று 1000 மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ