மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய த வெ க தலைவர் விஜய் - சென்னை விமான நிலைய தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தார்
சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் மலேசியாவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் அவரை வரவேற்கக் காத்திருந்த ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதா
Tvk


சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் மலேசியாவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்

விமான நிலையத்தில் அவரை வரவேற்கக் காத்திருந்த ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், விஜய் காலில் ஏறும் பொழுது திடீரென விழுந்தார்.

உடனடியாக, பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தூக்கி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் தற்போது தனது 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி மூலம் தீவிர அரசியலில் நுழைந்துள்ளார்.

'ஜனநாயகன்' படமே தனது கடைசிப் படம் என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இது 'ஜனநாயகன்' திரைப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் பல்நோக்கு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விஜய் அரசியலில் நுழைந்த பிறகு நடைபெறும் முதல் திரைப்பட விழா இது என்பதால், தமிழகம் மற்றும் மலேசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த அரங்கில் திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், இசை வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் தலைவர் விஜய், இன்று மலேசியாவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார்.

விஜய் வருவதை அறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரைக் காணக் கூடியதால், விமான நிலையம் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.

விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கோஷமிட்டபடி முண்டியடித்ததால், விமான நிலையம் முழுவதும் ஒரு அசாதாரணமான சூழல் ஏற்பட்டது.

Hindusthan Samachar / Durai.J